Sunday 5th of May 2024 03:40:36 PM GMT

LANGUAGE - TAMIL
.
தீவிரமடையும் நெருக்கடி நிலை; உலக வங்கியிடம் இலங்கை விடுத்துள்ள கோரிக்கை!

தீவிரமடையும் நெருக்கடி நிலை; உலக வங்கியிடம் இலங்கை விடுத்துள்ள கோரிக்கை!


தற்போதைய நெருக்கடி நிலையானது மருத்துவத்துறையிலும் தீவிரமடைந்துள்ள நிலையில் உலக வங்கியிடம் இலங்கை அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு தேவையான ஒளடதங்களை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்வதற்காக ஒத்துழைப்பு வழங்குமாறு இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன உலக வங்கியிடம் கோரியுள்ளார்.

உலக வங்கியின் தெற்காசிய வலயம் தொடர்பான பணிப்பாளர் லினோ ஷேர்பன் பென்ஸ் உள்ளிட்ட விசேட பிரதிநிதிகளை நேற்று சந்தித்தபோதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

நாட்டிற்கு முன்னுரிமை அடிப்படையில் ஒளடதங்களை வழங்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதாக உலக வங்கியின் பிரதிநிதிகள் இதன்போது தெரிவித்தனர்.

இலங்கையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் வெற்றிகரமாக இடம்பெறுவதை உலக வங்கியின் தெற்காசிய வலய பணிப்பாளர் வரவேற்றுள்ளார்.

பைசர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளும்போது உலக வங்கி இலங்கைக்கு வழங்கிய நிதியுதவிகளுக்காக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதன்போது நன்றிகளை தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE